ஈஷாவுக்கு சென்றபோது மாயமான பெண் சடலமாக மீட்பு - நடந்தது என்ன?
ஈஷாவுக்கு சென்றபோது மாயமான பெண் சடலமாக மீட்பு - நடந்தது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
கோவை ஈஷா யோகா மையத்திற்கு யோகா பயிற்சிக்காகச் சென்ற அவினாசியைச் சேர்ந்த பெண்ணைக் காணவில்லை என்று அவருடைய கணவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
அந்தப் பெண் தற்போது செம்மேடு காந்தி நகர் பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், அவினாசியைச் சேர்ந்தவர் பழனிகுமார்.
அவருக்கும் அவருடைய மனைவி சுபஸ்ரீக்கும் 11 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. பழனிகுமார், தனது மனைவியைக் காணவில்லை என்று டிசம்பர் 19ஆம் தேதியன்று கோவையிலுள்ள ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



