35,000 பிளாஸ்டிக் பைகளால் உருவான வீடு - காணொளி
35,000 பிளாஸ்டிக் பைகளால் உருவான வீடு - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
இந்தோனீசியாவில் கடந்த 2021ஆம் ஆண்டு கடலிலும், ஆற்றிலும் பல லட்சம் டன் குப்பைகள் தூக்கி வீசப்பட்டன.
சுங்காய் வாட்ச் என்ற அமைப்பின் மூலமாக பாலி, ஜாவா பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் இருந்தும் சட்டவிரோதமாக குப்பை கொட்டப்பட்ட இடங்களிலிருந்தும் குப்பைகளை அகற்றத் தொடங்கினார் கேரி பெஞ்செகிப் என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்.
அப்படி அகற்றப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளைக் கொண்டு ஒரு வீட்டையும் அவர் கட்டி இருக்கிறார்.
35,000 பிளாசிக் பைகளைக் கொண்டு இந்த வீட்டை உருவாக்கியிருக்கிறார் கேரி.
14 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டில், ஒருவர் வாழத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன.
கேரி தான் உருவாக்கிய இந்த மாடல் வீட்டை அதிகளவில் உருவாக்கி இயற்கை பேரழிவுகளால் வீட்டை இழந்தவர்களுக்கு வழங்கமுடியும் என்று நம்புகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



