You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
போர்நிறுத்தம் முடிந்து இரண்டாவது நாளாகத் தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதல் - காணொளி
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஏழு நாட்கள் அமலில் இருந்த தற்காலிகப் போர்நிறுத்தம் முடிந்து நேற்று (வெள்ளி, டிசம்பர் 1) மீண்டும் போர் துவங்கியது.
தெற்கு காஸாவிலிருந்து மக்களை வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு இஸ்ரேல் அறிவித்திருந்தது.
போர்நிறுத்தம் முறியடிக்கப்பட்டதற்கு இஸ்ரேலிய ராணுவம் மற்றும் ஹமாஸ் இருதரப்பும் பரஸ்பரக் குற்றம் சாட்டிக்கொள்கின்றன.
போர் மீண்டும் துவங்கிய முதல் நாளான நேற்றிலிருந்து 193 பேர் கொல்லப்பட்டிருப்பதாக, ஹமாஸின் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
போர் நிறுத்தம் முடிந்து இரண்டாவது நாளாக இஸ்ரேல் - ஹமாஸ் தாக்குதல் தொடர்ந்து வருகிறது.
அதேசமயம் காஸாவிலிருந்து தெற்கு இஸ்ரேலுக்குள் ராக்கெட்டுகள் ஏவப்பட்டன.
வெள்ளிக்கிழமையிலிருந்து 400-க்கும் மேற்பட்ட ஹமாஸின் இருப்பிடங்கள் தாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறியிருக்கிறது.
தெற்கு காஸா பகுதியில் இருக்கும் கான் யூனிஸின் மீது இஸ்ரேல் தீவிரமான தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் காஸாவில் மனிதாபிமானச் சிக்கல் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)