You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்
BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்.
வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம்.
எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம்.
நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும். பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை மாறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அந்த வகையில் இந்த வாரம், 10 ஆண்டுகளில் 36 முறை 144 தடை நீட்டிக்கப்பட்ட தமிழக கிராமம், மணிப்பூர் வன்முறையின் விளைவுகளை அனுபவிக்கும் சாமானிய மக்கள்- கள நிலவரம், பனிப்போரின் உச்சகட்டத்தில் நிலவில் அணுகுண்டு வெடிக்க அமெரிக்கா திட்டமிட்டதா?, புரோட்டீன் பவுடர்கள் எடுத்துக்கொள்வது ஆபத்தா? – ஆய்வுகள் சொல்வது என்ன?, தேர்தல் வெற்றிகளை AI தொழில்நுட்பம் தீர்மானிக்கும் காலம் வந்து விட்டதா? ஆகிய ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
10 ஆண்டுகளில் 36 முறை 144 தடை நீட்டிக்கப்பட்ட தமிழக கிராமம்
தொடர்ந்து பத்து ஆண்டுகளாக அரசு, அரசியல் கூட்டங்கள், விளையாட்டுப் போட்டிகள் என எந்த விதமான நிகழ்ச்சிகளும் நடைபெறாத இறுக்கமான சூழலில் இருந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாண்டியன்குப்பம் கிராமம் தற்போது சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது. இந்த கிராமத்தில் 36 முறை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்ட நிலையில், அதற்கான காரணம் என்ன? மீண்டும் இந்த கிராமம் சகஜ நிலைக்கு திரும்பியது எப்படி? முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
மணிப்பூர் வன்முறையின் விளைவை சந்திக்கும் சாமானியர்கள் - கள நிலவரம்
மணிப்பூரில் நடந்த வன்முறையில் இதுவரை அறுபதுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடிழந்துள்ளனர். மாநிலத்தின் செல்வாக்கு மிக்க மெய்தேயி சமூகத்தினருக்கு பட்டியல் பழங்குடி அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையே இந்த வன்முறைக்கு முக்கியக் காரணம் என்று நம்பப்படுகிறது. முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
அணுஆயுதப் போட்டி: பனிப்போரின் உச்சக்கட்டத்தில் நிலவில் அணுகுண்டு வெடிக்க அமெரிக்கா திட்டமிட்டதா?
1950-களில் விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்திய ரஷ்யாவுக்கு ஒரு அச்சத்தை உருவாக்கும் முயற்சியாக அமெரிக்க விஞ்ஞானிகள் ஒரு வினோதமான திட்டத்தை தீட்டினர். அணு குண்டு வெடித்து அந்த நிலவின் நிலப்பரப்பை கதிரியக்கம் மிக்க ஆபத்தான நிலப்பரப்பாக மாற்றியிருந்தால் அது எப்படியிருக்கும்? முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
புரோட்டீன் பவுடர்கள் எடுத்துக்கொள்வது ஆபத்தா? – ஆய்வுகள் சொல்வது என்ன?
பாடி பில்டர்கள், விளையாட்டு வீரர்களை தாண்டி, இன்று வெகுஜன மக்கள் மத்தியில் புரதச்சத்து குறித்து பரவலாக பேசப்பட்டு வருவதால், சந்தையில் விற்பனையில் உள்ள புரோட்டின் பவுடர்கள் குறித்து நாம் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
தேர்தல் வெற்றிகளை AI தொழில்நுட்பம் தீர்மானிக்கும் காலம் வந்து விட்டதா?
மார்ச் 31, 2023 மிக முக்கியமான நாள். அன்றுதான் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அதேநேரத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், துணை அதிபர் கமலா ஹாரிசும் வெள்ளை மாளிகையில் கொண்டாடியது போன்ற வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவை கூர்ந்து நோக்கினால், அதில் கமலா ஹாரிசுக்கு 6 விரல்கள் இருந்தன. கையின் மேல் பாகம் தென்படவில்லை. முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்