ஹமாஸ் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி - மேற்கு ஆசியாவில் உச்சக்கட்ட பதற்றம்

ஹமாஸ் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி - மேற்கு ஆசியாவில் உச்சக்கட்ட பதற்றம்
பிரசுரிக்கப்பட்டது

இஸ்ரேல் மீது பாலத்தீன போராளிக்குழுவான ஹமாஸ் திடீர் தாக்குதலை தொடுத்தது. இருபதே நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை வீசிய ஹமாஸ், மொத்தம் 7 ஆயிரம் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

பதிலுக்கு இஸ்ரேல், பாலத்தீனம் மீது நடத்திய பயங்கர தாக்குதலில் குறைந்தது 161 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் ஆயிரம் பேர் வரை காயம் அடைந்துள்ளதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனை ஆப்பரேஷன் அயர்ன் ஸ்வோர்ட் என இஸ்ரேல் அழைக்கிறது.

நாம் போரில் இருக்கிறோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் இந்த மோதலால் பதற்றம் நிலவுகிறது

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)