நாகர்கோவில்: மலைப்பாம்பை கொன்று எண்ணெய் தயாரித்த முதியவர் - எதற்காக தெரியுமா?

நாகர்கோவில்: மலைப்பாம்பை கொன்று எண்ணெய் தயாரித்த முதியவர் - எதற்காக தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப்பாம்பை கொன்று எண்ணெய் தயாரித்த குற்றத்திற்காக முதியவர் ஒருவர் வனத்துறையால் கைது செய்யப்பட்டார்.

மாமிசம் மற்றும் தோலுக்காக பாம்புகள் கொல்லப்படுவது உண்டு. ஆனால் மருத்துவ பயன்பாட்டிற்காக மலைப்பாம்பு கொல்லப்பட்ட சம்பவம் மிகவும் அரிதாகப் பார்க்கப்படுகிறது.

வனத்துறை அலுவலர்கள் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட போது, மலைப்பாம்பை பயன்படுத்தி அவர் காய்ச்சிய எண்ணெய் கிடைத்துள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)