You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு - ஆறாக பாய்ந்தோடிய லாவா (காணொளி)
எரிமலை வெடிப்புக்குப் பிறகு குழம்பு ஆறாகப் பாயும் காட்சி இது.
ஐஸ்லாந்தின் ரேய்க்ஜேனஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலையில் புதன்கிழமை சக்தி வாய்ந்த வெடிப்பு ஏற்பட்டது.
இதனால் க்ரின்டவிக் நகர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
தற்போது எரிமலை வெடிப்பின் தாக்கம் குறைந்துள்ளது.
கடந்த டிசம்பர் முதல் இப்பகுதியில் ஐந்தாவது முறை எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
ரேய்க்ஜேனஸ் தீபகற்பத்தில் 800 ஆண்டுகளாகச் செயலற்று இருந்த எரிமலை 3 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.
அதன்பின் ஏற்பட்ட வெடிப்பிலேயே இதுதான் சக்தி வாய்ந்தது என ஐஸ்லாந்து வானிலை மையம் கூறுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)