குண்டர்களிடம் இருந்து தப்பிக்க உயிரைப் பணயம் வைத்து நதியைக் கடக்கும் மக்கள்

குண்டர்களிடம் இருந்து தப்பிக்க உயிரைப் பணயம் வைத்து நதியைக் கடக்கும் மக்கள்
பிரசுரிக்கப்பட்டது

ஹைட்டி நாட்டில், குண்டர்கள் பிடியில் உள்ள நகரில் வன்முறையில் இருந்து தப்பிக்க தங்கள் உயிரை பணயம் வைத்து நதியைக் கடக்கிறார்கள்.

கடந்த புதன்கிழமை அந்நாட்டின் மத்திய பிராந்தியத்தில் குண்டர்கள் புதிய தாக்குதலை தொடங்கியதால் டஜன் கணக்கான மக்கள் நதியில் நீந்தி தப்பித்தனர்.

இவர்கள் தப்பினாலும், அந்த தாக்குதலில் 11 வயது சிறுவன் உள்பட பலர் கொல்லப்பட்டனர்,

கரீபிய தீவுகளில் உள்ள நாடான ஹைட்டியில் ஆர்டிபோனிடே பகுதியில் உள்ள மிகப்பெரிய குழுதான் கிரான் க்ரிப். முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தாக்குதலில் எழுபதுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்ட்டனர். ஹைட்டியின் சமீபத்திய வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய படுகொலைக்கு கிரான் க்ரிப் குழு மீது குற்றம்சாட்டப்படுகிறது.

இந்தாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் மட்டும் குறைந்தது 35 குழந்தைகள் உள்பட 1600-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 850 பேர் படுகாயமடைந்தனர் என ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் கூறுகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.