'அமெரிக்க இறக்குமதிக்கு இந்தியா வரி விதிக்கப் போவதில்லை' - டிரம்ப் பேச்சும் ஜெய்சங்கரின் மாறுபட்ட கருத்தும்

'அமெரிக்க இறக்குமதிக்கு இந்தியா வரி விதிக்கப் போவதில்லை' - டிரம்ப் பேச்சும் ஜெய்சங்கரின் மாறுபட்ட கருத்தும்
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகள் அனைத்தையும் கைவிட இந்தியா முன்வந்துள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்திய செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசியுள்ள இந்திய வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பேச்சுவார்த்தைகள் இன்னும் நடைபெற்று கொண்டு இருக்கின்றன, இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளார்.

கத்தார் தலைநகர் தோகாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட டிரம்ப், இந்திய அரசாங்கம் "எங்களுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. அவர்கள் அடிப்படையில் எங்களிடம் எந்த வரியும் வசூலிக்கத் தயாராக இல்லை" என்று கூறினார்.

டிரம்ப் கூறிய கருத்துக்கு முரண்பாடாக ஜெய்சங்கர் தெரிவித்த கருத்து உள்ளது.

''எந்தவொரு வர்த்தக ஒப்பந்தமும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும், இரு தரப்புக்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும். அதுவே அந்த ஒப்பந்தத்திலிருந்து எங்கள் எதிர்பார்ப்பு. ஒப்பந்தம் இறுதியாகும்வரை அதுபற்றிய எந்த முடிவும் சரியானதாக இருக்காது'' என்கிறார் ஜெய்சங்கர்.

இந்தியாவும் அமெரிக்காவும் தற்போது வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. இந்த சமயத்தில் அமெரிக்கத் தரப்பில் இருந்து அதுவும் அந்நாட்டு அதிபரே இப்படியொரு கருத்தை வெளியிட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

இதன் முழு விபரம் காணொளியில்...

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு