காணொளி: "பணியாளர்கள் இல்லை, மின் விளக்குகள் இல்லை" - இருட்டில் இயங்கும் டார்க் ஃபேக்டரியின் கதை

காணொளி: "பணியாளர்கள் இல்லை, மின் விளக்குகள் இல்லை" - இருட்டில் இயங்கும் டார்க் ஃபேக்டரியின் கதை
பிரசுரிக்கப்பட்டது

மனிதர்களின் தலையீடு இல்லாமலே இயந்திரங்கள் பணியாற்றுவதைக் கடந்த காலங்களில் நாம் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்களில் பார்த்திருப்போம். ஆனால் இன்றைய செயற்கை நுண்ணறிவு உலகில் அது யதார்த்தமாகி உள்ளது.

தமிழ்நாட்டில் ஒரகடத்தில் உள்ள பாலிமாடெக் எலக்ட்ரானிக்ஸ் என்கிற நிறுவனம் டார்க் ஃபேக்டரி முறையில் இயங்கி வருகிறது.

இருள் சூழ்ந்த இடத்தில் மனிதர்களின் தலையீடு இல்லாமல், மின்விளக்குகள் ஒளிராமல் இயந்திரங்கள் தானியங்கி முறையில் செமிகன்டக்டர் சிப்களைத் தயாரித்து வருகின்றன. டார்க் ஃபேக்டரி என்றால் என்ன? இந்த நிறுவனம் எவ்வாறு இயங்குகிறது? இந்தக் காணொளியில் முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம்.

தயாரிப்பு - மோகன்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு - ஜனார்தனன்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு