அமெரிக்கா கொடுக்கும் பேட்ரியாட் ஏவுகணைகள் யுக்ரேனுக்கு எப்படி உதவும்?

அமெரிக்கா கொடுக்கும் பேட்ரியாட் ஏவுகணைகள் யுக்ரேனுக்கு எப்படி உதவும்?
பிரசுரிக்கப்பட்டது

யுக்ரேன் நீண்ட காலமாக கேட்டுக்கொண்டிருந்த ஒரு வான் பாதுகாப்பு அமைப்பை தர அமெரிக்கா சம்மதித்துள்ளது. அதுதான் பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகள்.

இதுகுறித்த முழு விவரங்களை டிரம்ப் கூறவில்லை என்றாலும், இதில் பேட்ரியட் ஏவுகணை அமைப்பு மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்கள் இருக்கும் என அவர் கூறினார்.

நேட்டோவுடனான புதிய ஒப்பந்தத்தின்படி, அமெரிக்கா நேட்டோவுக்கு ஆயுதங்களை விற்கும், நோட்டோவில் அங்கம் வகிக்கும் நாடுகள் ரஷ்யாவை எதிர்கொள்ள அதனை யுக்ரேனுக்கு வழங்கும்.

இதற்கு யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கி திங்கட்கிழமை டொனால்ட் டிரம்புக்கு நன்றி தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு