100 நாள் வேலைத் திட்டத்தின் இன்றைய நிலை என்ன? - கள நிலவரம்

100 நாள் வேலைத் திட்டத்தின் இன்றைய நிலை என்ன? - கள நிலவரம்
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவின் மிகப்பெரிய முற்போக்கான திட்டம், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம். இத்திட்டம் ஒட்டுமொத்த உலகிற்குமே ஒரு பாடமாக அமைந்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி சட்டம் 2005ஆம் ஆண்டு இந்திய அரசால் கொண்டு வரப்பட்டது.

பின், 2008 ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. ஊரக பகுதிகளில் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒரு நபருக்கு 100 நாட்களுக்கு வேலை வழங்குவதை இந்த சட்டம் உத்தரவாதம் அளிக்கிறது.

கிராம பஞ்சாயத்துகளே வேலை வழங்கும் பணிகளை மேற்கொள்கின்றன. 18 வயது பூர்த்தியான திறன் சாரா உடல் உழைப்பு கோரும் வேலை செய்ய விரும்பும் நபர்களுக்கு இந்த பணி வழங்கப்படுகிறது.

இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக பொருளாதார அறிஞர்களால் கொண்டாடப்படும் இந்த திட்டத்தின் இன்றைய நிலை என்ன என்பதை அறிய பிபிசி தமிழ் களத்துக்குச் சென்றது. இது வெண்டயம்பட்டி கிராமம், தஞ்சாவூரில் இருந்து 44 கிமீ தொலைவில் விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் கிராமம். இங்கே 2000 பேருக்கும் மேல் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)