You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செவிலியர் வேலையை விட்டுவிட்டு உரம் தயாரித்து லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டும் பெண்
காவ்யா தாத்கிலே தற்போது புனே மாவட்டத்தின் ஜுன்னர் தாலுகாவில் அமைந்துள்ள தாத்கிலேவாடி கிராமத்தில் வசித்துவருகிறார்.
நகரத்தில் செவிலியர் வேலையை விட்டுவிட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அவர் தனது கிராமத்திற்கு வந்தார். தன்னுடைய விவசாய நிலத்தில் பணிபுரிவதற்காக அவர் திரும்பி வந்தார்.
இதனால் காவ்யா மண்புழு உரத் தயாரிப்பில் இறங்கினார். அவர், மண்புழு உரத்தைத் தயாரித்து விற்க ஆரம்பித்தார். ஆனால், நாம் நினைப்பது போல இது எளிதானது அல்ல என்பதை தொடக்கத்திலேயே அவர் உணர்ந்தார்.
இதன்மூலம் காவ்யா அதிக நம்பிக்கையும் ஊக்கமும் அடைந்தார். அதன்பின், மண்புழு உர நீர், மண்புழு வளர்ப்பு ஆகியவற்றிலும் அவர் ஈடுபட்டார். ஒரு தொகுதி மண்புழு உரம் இரண்டு மாதங்களுக்குள் அனுப்ப தயாரானது.
காவ்யாவுக்கு யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் உதவியாக இருக்கின்றன. சமூக ஊடகங்கள் மூலமாகவே அவருக்கு பல ஆர்டர்கள் கிடைக்கின்றன. இதில் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் அவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்கிறார்.
காவ்யாவின் கணவர் ராஜேஷ் மெக்கானிக்கல் இன்ஜினியர். ஆனால், தன் மனைவிக்கு உதவிபுரிய ஆறு மாதங்களுக்கு முன் வேலையை விட்டுவிட்டார்.
இப்போது மண்புழு உரத்திற்கு அதிக தேவை இருக்கிறது. ஆனால், மண்புழு உரம் தயாரிக்கும் போது நீங்கள் சில விஷயங்களை புரிந்துகொள்ள வேண்டும்.
காவ்யாவுக்கு 2.5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அவருடைய நிலத்தில் முதன்மையாக மாங்காய் மற்றும் நெற்பயிர் ஆகியவற்றை விளைவித்து வருகிறார். விவசாயம் செய்ய தொடங்கும் முன் அதுகுறித்து கொஞ்சம் அறிந்துகொண்டு வர வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)