பஞ்சாபில் தந்தையின் விவசாயத்தை தானே ஏற்ற இளம்பெண்

பஞ்சாபில் தந்தையின் விவசாயத்தை தானே ஏற்ற இளம்பெண்
பிரசுரிக்கப்பட்டது

படித்து விட்டு வெளிநாடு செல்லாமல் விவசாயம் செய்து வருகிறார் பஞ்சாபில் ஒரு இளம் பெண். தந்தைக்கு உடல் நலம் குன்றிய பிறகு விவசாயம் செய்ய தொடங்கினார், சந்தீப் கவுர்.

பெண் பிள்ளை விவசாயம் செய்வது குறித்து ஊரில் இருப்பவர்கள் கிண்டல் செய்து வந்தாலும், அவர் தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரது குடும்பம் அவருக்கு உறுதுணையாக இருக்கிறது. தற்போது வேளாண் படிப்பில் இளங்கலை படித்து வருகிறார்.

வேளாண் மேம்பாட்டு அலுவலராக வேண்டும் என்று அவருக்கு ஆசை. புதிய வேளாண் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, விவசாயிகளின் வருமானத்தை பெருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)