ஆஸ்திரேலியாவில் கரையொதுங்கிய ராட்சத பொருள் சந்திரயான் ராக்கெட்டின் பகுதியா?

ஆஸ்திரேலியாவில் கரையொதுங்கிய ராட்சத பொருள் சந்திரயான் ராக்கெட்டின் பகுதியா?
பிரசுரிக்கப்பட்டது

ஆஸ்திரேலிய கடற்கரையில் கரையொதுங்கிய ராட்சத உலோக உருளை போன்ற பொருள் இந்தியாவுக்குச் சொந்தமானதா என்று சந்தேகம் எழுந்த நிலையில் இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் விளக்கமளித்துள்ளார்.

இது ராக்கெட்டின் பாகம் என்று கூறப்படுகிறது.

எனினும் “நாங்கள் அதை ஆய்வு செய்யாத வரை இது எங்களுடையது என்பதை உறுதிப்படுத்த முடியாது” என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு வடக்கே சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிரீன் ஹெட் கடற்கரையில் சில நாள்களுக்கு முன்பு ராட்சத உலோகப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்தே இந்தப் பொருள் பற்றிய ஊகங்கள் நிலவி வருகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: