செந்தில் பாலாஜி விவகாரம்: பாஜகவுக்கு மு.க.ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கை

காணொளிக் குறிப்பு, செந்தில் பாலாஜி விவகாரம்: பாஜகவுக்கு மு.க.ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கை
செந்தில் பாலாஜி விவகாரம்: பாஜகவுக்கு மு.க.ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கை
பிரசுரிக்கப்பட்டது

செந்தில் பாலாஜியை தீவிரவாதியைப் போல அடைத்து வைக்க வேண்டிய அவசியம் என்ன என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் காணொளியில், "பாஜகவுக்கு எதிரான 3000 பேர் மீது சோதனை நடத்தப்பட்டிருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

"பத்து ஆண்டுக்கு முன்னர் உள்ள பழைய புகாரை வைத்து, 18 மணி நேரம் அடைத்து வைத்து, மன அழுத்தம் கொடுத்து, மனரீதியாகவும் - உடல் ரீதியாகவும் பலவீனப்படுத்தி, உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இதயநோயை உருவாக்கி இருக்கிறார்கள் என்றால், இதைவிட அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் இருக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

"கருத்தியல் ரீதியாக, அரசியல்ரீதியாக, தேர்தல் களத்தில் எதிர்கொள்ள முடியாதவர்களை வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ- என விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டுவது பா.ஜ.க.வின் பாணி! அதுதான் அவர்களுக்குத் தெரிந்த ஒரே பாணி! இந்த ஜனநாயக விரோத பாணியைத்தான் இந்தியா முழுமைக்கும் அவர்கள் பின்பற்றி வருகின்றனர். ஒரே ஸ்கிரிப்ட்டைத்தான் வேறு வேறு மாநிலங்களில் டப்பிங் செய்து வருகிறார்கள்." என்று அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

பாஜகவுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

பட மூலாதாரம், CMOTAMILNADU/TWITTER

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: