இரானில் கோமா நிலைக்கு சென்ற சிறுமி; காவலர்கள் மீது குற்றச்சாட்டு - என்ன நடந்தது?
16 வயதேயான சிறுமி ஒருவர் டெஹ்ரான் மெட்ரோவில் இருந்து நிலைகுலைந்த நிலையில் மீட்கப்பட்டார். ஹிஜாப் அணியாததால் அவர் போலீஸாரால் தாக்கப்பட்டார் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
அர்மிதா ஜெரவண்ட் என்ற அந்த பெண் தற்போது மருத்துவமனையில் சுயநினைவிழந்த நிலையில் உள்ளார்.
மெட்ரோவின் உள்ளே அர்மிதா ரத்த அழுத்த குறைவால் நிலைகுலைந்தபோது தலையில் காயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
அர்மிதாவுக்கு எதுவும் ஆகவில்லை என்று கூறும்படி அவரின் பெற்றொருக்கு அழுத்தம் தரப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அர்மிதாவின் தாயார் அளிக்கும் பேட்டிகள் அழுத்தத்தின் காரணமாக தரப்படுகிறது என்பது அவர்களின் கூற்று.
கடந்த ஆண்டு ஹிஜாப் அணியவில்லை என்று கூறி போலீஸார் தாக்கியதில் மாசா அமினி என்ற பெண் உயிரிழந்தது மிகப்பெரிய போராட்டங்களுக்கு வழி வகுத்தது. இந்த எதிர்ப்பை அரசாங்கம் முறியடித்தது.
மீண்டும் அப்படி ஏதும் நிகழ்ந்துவிடாமல் தடுக்க இரான் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



