இரான் தாக்குதல்: 99% ட்ரோன்கள், ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல்

இரான் தாக்குதல்: 99% ட்ரோன்கள், ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல்
பிரசுரிக்கப்பட்டது

ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது இரான் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளது. சிரியாவில் உள்ள அதன் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் கூறப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ், "பிராந்திய அளவிலான பேரழிவு அதிகரிப்பின் ஆபத்து குறித்து ஆழ்ந்த கவலையுடன்" இருப்பதாகக் கூறியுள்ளார்.

சுமார் 300 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் இரானால் ஏவப்பட்டதாகவும், சில ஏவுகணைகள் இராக் மற்றும் ஏமனில் இருந்து வந்ததாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.

ஊடகங்களிடம் பேசிய இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, நள்ளிரவில் ஏவப்பட்ட ஏவுகணைகள் இராக் மற்றும் ஏமனிலிருந்து வந்ததாகத் தெரிவித்தார்.

இரானால் ஏவப்பட்ட 99% ட்ரோன்கள் அல்லது ஏவுகணைகள் இஸ்ரேல் வான்வெளியை அடைவதற்கு முன்னதாகவே சுட்டு வீழ்த்தப்பட்டதாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)