ஸ்லோவாக்கியா பிரதமரை துப்பாக்கியால் சுட்ட நபர் யார்? என்ன நடந்தது?

ஸ்லோவாக்கியா பிரதமரை துப்பாக்கியால் சுட்ட நபர் யார்? என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது

ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிட்சோவை புதன்கிழமை ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். ஹாண்ட்லோவா பகுதியில் ராபர்ட் ஃபிட்சோ ஆதரவாளர்களுக்கு மத்தியில் இருந்த ஒரு நபர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்.

ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட ஃபிட்சோவுக்கு 5 மணி நேர அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். சம்ப இடத்திலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். கைதானவரின் அடையாளத்தை இதுவரை போலீஸ் வெளியிடவில்லை.

ஆனால், உறுதி செய்யப்படாத உள்ளூர் ஊடக செய்திகள், அவர் 71 வயதான எழுத்தாளர் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் என்கின்றன. பிபிசியிடம் பேசிய ஸ்லோவாக்கியா துணை பிரதமர் டோமஸ் டரபா, ஃபிட்சோவுக்கு அறுவை சிகிச்சை சிறப்பாக நடந்ததாகவும், அவர் உயிர் பிழைப்பார் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)