H3N2 வைரஸ் அபாயகரமானதா? - நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் (காணொளி)
H3N2 வைரஸ் அபாயகரமானதா? - நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் (காணொளி)

பிரசுரிக்கப்பட்டது
கோவிட் 19 போன்ற அறிகுறிகளுடன் இந்தியாவில் வேகமாக பரவி வரும் வைரஸ் இந்தியாவிற்கு புதிய தலைவலியாக உருவாகியுள்ளது.
பலருக்கும் சுவாசப் பிரச்னைகளை உருவாக்கி வரும் இந்த வைரஸை, H3N2 வைரஸாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், இந்திய மருத்துவ கூட்டமைப்பும் அடையாளப்படுத்தியுள்ளன.
சமீப காலமாக வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் குழந்தைகள், பெரியவர்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் பாதித்து வருகிறது.
இந்த வைரஸ் உண்மையிலேயே ஆபத்தானதா? இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகாமல் தங்களை தற்காத்து கொள்வது எப்படி, வைரஸ் தொற்று ஏற்பட்டுவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற விஷயங்கள் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விரிவான விளக்கம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



