உதவி கிடைக்காத நிலையில் வெள்ள நீரில் தத்தளிக்கும் தரமணி மக்கள்

உதவி கிடைக்காத நிலையில் வெள்ள நீரில் தத்தளிக்கும் தரமணி மக்கள்
பிரசுரிக்கப்பட்டது

மழை நின்று பல மணிநேரங்கள் ஆன பிறகும்கூட தரமணியின் 100 அடி சாலையில் வெள்ளநீர் முழங்கால் வரை தேங்கியிருந்தது. அதனிடையே இருசக்கர வாகனத்தைச் செலுத்திய நான், ரவுண்டானாவை தாண்டியதும் வாகனம் செயலிழக்கவே அதைத் தள்ளிச் சென்று சாலையோரம் சிறு மேடாய்த் தெரிந்த மேம்பாலத்தின் அருகே நிறுத்தினேன்.

முக்கிய சாலையில் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு வாகனங்களைப் பார்க்க முடிந்தது. அந்த வாகனங்கள் மெல்லிய வேகத்தில் நகர்ந்து கொண்டே இருந்தன.

அவற்றின் பின்னால் நின்றிருந்த ஒரு காவலர் அதன் அருகே வருவோருக்கு ஒவ்வொரு பொட்டலமாக விநியோகித்துக் கொண்டிருந்தார்.

தரமணி மேம்பாலத்தில் நேற்று மாலையில் ஏறிப் பார்த்தபோது, ராஜீவ் காந்தி ஐடி சாலையில் இருந்து வேளச்சேரி செல்லும் அந்த முக்கிய சாலையில் உள்ள ரவுண்டானாவை சுற்றி எங்கும் தண்ணீர்மயமாகக் காட்சியளித்தது. ஆனால், தரமணியின் உள்ளார்ந்த வீதிகளுக்குள் சென்று பார்த்த காட்சிகள் 100 அடி சாலையில் பார்த்தது ஒன்றுமே இல்லை என்பதை உணர்த்தியது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)