You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாஸ்மதி அரிசிக்கு நறுமணம் எப்படி கிடைக்கிறது?
பாஸ்மதிக்கு எப்படி இவ்வளவு நறுமணம் வருகிறது? உலகம் முழுவதும் பல வகையான நறுமண அரிசிகள் இருந்தாலும், இதை ஏன் ’நறுமண அரிசிகளின் ராணி’ என்று அழைக்கிறார்கள்?
இந்திய துணைக்கண்டத்தை ஆண்ட பல மன்னர்கள் நாடுகளை வென்று வாகை சூடினாலும், மன்னர்களின் இதயங்களை கொள்ளையடித்தது பாஸ்மதி அரிசிதான்.
சுல்தான்கள் பாஸ்மதிக்கு மிகுந்த மரியாதை அளித்தனர்.
நறுமண அரிசிகளில் முக்கியமான ஒன்றான பாஸ்மதி அரிசி வகைகள் இமயமலையை ஒட்டிய நிலப்பகுதிகளான இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பிற நாடுகளில் தோன்றின. இப்பகுதியில் இருந்து, இந்த அரிசி வகைகள் ஆசியா முழுவதும் பரவின.
காலப்போக்கில், அந்தந்த பகுதிகள் மற்றும் அதன் தட்பவெப்ப சூழலை பொறுத்து புதிய நறுமண அரிசி வகைகள் உருவாகின.
பஞ்சாபி கவிஞர் வாரிஸ் ஷா 1766 இல் எழுதிய 'ஹீர் ராம்ஜா' கவிதையில் பாஸ்மதி என்ற பெயரை முதலில் குறிப்பிட்டார் .
பாஸ்மதி என்றால் ’வாசனை’ என்று பொருள்.
ராஜஸ்தானின் உதய்பூரில் கண்டறியப்பட்ட தொல்பொருள் ஆய்வு முடிவுகள் மூலம், கிமு 2,000-1,600ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பயன்படுத்தப்பட்ட நீண்ட நெல் வகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த நெல்வகைகளிலிருந்து கிடைத்த அரிசி பாஸ்மதியின் முன்னோடியாக நம்பப்படுகிறது.
இது பற்றிய விரிவான காணொளி இது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்