You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கூடலூர்: 30 அடி குழிக்குள் விழுந்த குட்டி யானை - போராடி மீட்ட வனத்துறை
நீலகிரி மாவட்டம் கூடலூரில் 30 அடி குழிக்குள் ஒரு யானைக்குட்டி தவறி விழுந்தது. யானையை மீட்க வனத்துறை கடுமையாக போராடினர்.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டி, பாதை அமைத்து யானை மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட யானை பயத்தில் அங்குமிங்கும் ஓடியதோடு மட்டுமல்லாது, வனத்துறையின் வாகனத்தையும் ஆக்ரோஷமாகத் தாக்கியது.
மீட்கப்பட்ட யானையை தாய் யானையுடன் வனத்துறை சேர்த்து வைத்ததாக சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்தார்.
தாய் யானையுடன் குட்டி யானை காட்டுக்குள் செல்லும் காட்சியையும் அவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
முழு விவரம் காணொளியில்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)