அமெரிக்கா: வளர்ப்புப் பிராணிகளை குளோனிங் செய்வதில் ஆர்வம் காட்டும் மக்கள்

அமெரிக்கா: வளர்ப்புப் பிராணிகளை குளோனிங் செய்வதில் ஆர்வம் காட்டும் மக்கள்
பிரசுரிக்கப்பட்டது

கடந்த 1996ஆம் ஆண்டில் பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் முதிர்ச்சியடைந்த செல் மூலம் டோலி என்ற செம்மறி ஆட்டை முதன்முதலில் குளோனிங் மூலம் உருவாக்கினர். இப்போது நீங்கள் உங்கள் செல்லப்பிராணிகளை சுமார் 41 லட்சம் ரூபாய் செலவில் குளோனிங் மூலம் உருவாக்கலாம்.

விலங்குகளை குளோனிங் செய்வது பெரும்பாலான நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவில் அதற்கு தடை இல்லை.

ஆனால், குளோனிங் செய்யப்பட்ட விலங்குகள், உங்களின் செல்லப்பிராணியைப் போன்று அப்படியே இருக்குமா?

விலங்குகளை குளோனிங் செய்வது சூழலியல் ஆர்வலர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஆனால், விலங்குகளை குளோனிங் செய்வது எப்போதும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. குளோனிங் வெற்றியடையும் விகிதம் குறைவு. அதில் ஈடுபடுத்தப்படும் விலங்குகளுக்கு குளோனிங் நடைமுறை வலிமிகுந்ததாகவும் இருக்கும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)