இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையால் பிரிந்து போன அத்தை-மருமகள்! சேர்ந்தது எப்படி?

காணொளிக் குறிப்பு, இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின் போது பிரிந்து போன அத்தை மருமகள் சந்தித்து கொண்டனர்.
இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையால் பிரிந்து போன அத்தை-மருமகள்! சேர்ந்தது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின் போது பிரிந்து போன அத்தை மருமகள் இருவரும் புனிதத்தளமான மெக்காவில் முதல்முறையாக சந்தித்து கொண்டனர்.

மருமகள் ஹனிஃபா பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கபுர்தலா நகரின் திப்பா கிராமத்தில் வாழ்ந்து வந்தவர். அவரது அத்தை ஹஜ்ரா பீபியோ பாகிஸ்தானை சேர்ந்தவர். இந்த இரண்டு குடும்பங்களும் 1947ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது பிரிய நேரிட்டது. ஹனிஃபா மற்றும் அவரது குடும்பம் பஞ்சாபிலேயே தங்கி விட, ஹஜ்ரா பீபி மற்றும் அவரது குடும்பம் பாகிஸ்தானுடன் சென்று விட்டது.

பல சிக்கல்கள் கடந்து .தொடர் முயற்சியால் தனது அத்தையை சந்தித்துள்ளார் ஹனிஃபா. பல தசாப்தங்களாக பிரிந்து கிடந்த இந்த குடும்பத்தை ஒன்று சேர்க்கும் பணியை வெற்றிகரமாக முடித்துள்ளார் பாகிஸ்தான் யூடியூபரான நசீர் தில்லான். ஹஜ்ரா பீபி பாதுகாத்து வைத்திருந்த கடிதத்தின் மூலமாகவே இது சாத்தியமாயிற்று என்று கூறியுள்ளார் நசீர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)