மதுரை கட்டுமான தொழிலாளர்கள் முதன் முறையாக விமானத்தில் பயணம் - என்ன சொல்கிறார்கள்?
மதுரையைச் சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவன உரிமையாளர் தனது நிறுவனத்தில் பணியாற்றும் கட்டுமான தொழிலாளர்கள் 75 பேரை மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து சென்றுள்ளார்.
மெரினா கடற்கரை, அங்குள்ள எம்ஜிஆர், அண்ணா போன்றோரின் நினைவிடம், அண்மையில் மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் நினைவிடம் போன்ற இடங்களுக்கு தொழிலாளர்களை அழைத்து சென்று சுற்றிக்காட்டிய பிறகு நட்சத்திர ஓட்டலில் விருந்து வைத்துள்ளார். அதன் பின்னர் சொகுசு பேருந்தில் மதுரைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
விவசாய குடும்ப பின்னணியைச் சேர்ந்ததாக கூறும் மாயன், தனக்கு கிடைத்த அனுபவம் தனது தொழிலாளர்களுக்கும் கிடைப்பதற்காக இப்படிச் செய்ததாக கூறுகிறார்.
"விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பொழுதே தொழிலாளர்கள் ஒவ்வொருவர் முகத்திலும் சொல்ல முடியாத அளவு மகிழ்ச்சியை கண்டேன். மதுரை விமான நிலையத்திலிருந்து விமான கிளம்பிய போது அனைவரும் கூச்சலிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்த மகிழ்ச்சி இதனால் வரை நான் பார்த்ததே கிடையாது. " என்றார் அவர்.
முதன் முதலாக விமானத்தில் பயணித்த அனுபவம் மகிழ்ச்சியானதாக இருந்ததாகவும் கட்டடத் தொழிலாளிகள் கூறினர்.
"சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்தை காலை 7:00 மணிக்கு சென்றடைந்தோம். விமானத்தை பார்த்ததும் பதற்றமாக இருந்தது. விமானம் கிளம்பிச் சிறிது தூரம் பறந்த பிறகே பதற்றம் குறைந்தது. சென்னையில் பல இடங்களை சுற்றிப் பார்த்து மகிழ்ச்சியுடன் திரும்பி இருக்கிறோம்." என்று கட்டட தொழிலாளியான செந்தில்குமார் கூறினார்.
முழு விவரம் காணொளியில்...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



