தூத்துக்குடி வெள்ளத்தால் மண்மூடிப்போன ராமநாதபுரம் விவசாயம் - காணொளி

தூத்துக்குடி வெள்ளத்தால் மண்மூடிப்போன ராமநாதபுரம் விவசாயம் - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அதையொட்டியுள்ள ராமநாதபுரத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

வளமான பகுதியில் மல்லி, மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் நாசமாகியுள்ளன.

ராமநாதபுரத்தின் உச்சிநத்திலிருந்து, தூத்துக்குடியின் சூரங்குடி செல்லும் சாலையில் பாலம் சேதமடைந்துள்ளது. கஞ்சம்பட்டி ஓடை வழியாக விவசாய நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது.

மகசூல் எடுக்க தயாராக இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன. பசுமையான இடத்தில் செழிப்பான விவசாயம் செய்து வந்தவர்கள் இன்னும் வெள்ளத்தின் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)