ரொனால்டோ இந்தியாவில் வந்து விளையாட வாய்ப்பு உள்ளதா? (காணொளி)

ரொனால்டோ இந்தியாவில் வந்து விளையாட வாய்ப்பு உள்ளதா? (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது

போர்ச்சுகல் நட்சத்திர ஸ்டிரைக்கர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சௌதி அரேபியாவின் அல்-நாசர் கால்பந்து கிளப்பில் இணைந்துள்ளார்.

இனி ஆசிய கால்பந்து போட்டிகளில் விளையாடப் போகும் ரொனால்டோ, இந்திய அணிகளுடன் மோதுவதற்கு வாய்ப்புள்ளதா?

மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் இருந்து சர்ச்சைக்குரிய வகையில் ஏற்கெனவே வெளியேறிவிட்ட ரொனால்டோ தற்போது இந்த அணியில் இணைந்துள்ளார்.

இந்த அணிக்காக 2025ஆம் ஆண்டு வரை ஆடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்காக கால்பந்து வரலாற்றில் இதுவரை யாரும் வாங்காத சம்பளத்தை ரொனால்டோவுக்கு தருவதற்கு அல்-நாசர் முன்வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. விரிவான அலசல் இந்த காணொளியில்...

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: