You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
1 மில்லியன் டாலர் கோல்ட் கார்ட் விசா பற்றி டிரம்ப் பேசியது என்ன? - காணொளி
அமெரிக்க அரசு புதிய டிரம்ப் கோல்ட் கார்ட் குடியேற்ற விசா ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதைப்பற்றி பேசிய டிரம்ப், "டிரம்ப் கோல்ட் கார்டை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இதன் மூலம் வரும் தொகை முழுவதும் அமெரிக்க அரசுக்கு செல்லும். இது மிகப்பெரிய தொகையாக இருக்கக்கூடும். இது சிலருக்கு உதவியாக இருக்கும். இது ஒரு உதாரணம் மட்டுமே. பலரும் இதை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன."
"இது க்ரீன் கார்டு போலத் தான், ஆனால் க்ரீன் கார்டை விட நிறைய பயன்கள் இதில் இருக்கிறது. ஹார்வர்ட், எம்.ஐ.டி போன்ற எந்த பெரிய கல்லூரிகளில் இருந்தும் மாணவர்களை தேர்வு செய்ய நிறுவனங்களுக்கு வாய்ப்பு இருக்கும். நீங்கள் ஒரு கார்டை வாங்கி, அந்த நபரை அமெரிக்காவில் வைத்திருக்கலாம்." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு