You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'கண் இல்லாவிட்டாலும் கை இருக்கிறதே'- கணினி உதவியுடன் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய பார்வை மாற்றுத் திறனாளி மாணவர்
கண் இல்லாவிட்டாலும் கை இருக்கிறதே என்ற உத்வேகத்தில் இந்த மாணவர் தட்டச்சு செய்யும் வேகம் ஆச்சர்யப்பட வைக்கிறது.
யார் இந்த மாணவர்? அவர் செய்த செய்த செயல் என்ன?
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். சென்னை பூவிருந்தவல்லியில் பார்வைத் திறன் குறைபாடு உடையோர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
கடந்த மார்ச் 3ஆம் தேதியன்று தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வை கணினி உதவியுடன் ஆனந்த் எழுதியுள்ளார். மாநில பாடத் திட்டத்தில் பார்வை மாற்றுத் திறனாளி ஒருவர் கணினி உதவியுடன் எழுதுவது இதுவே முதல்முறை.
இதற்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக செயலியின் உதவியுடன் அவர் தேர்வு எழுதியுள்ளார். கேள்விகளை ஒருவர் வாசித்தால் மட்டும் போதும். அதற்கான பதில்களை விரைவாக கணினியில் தட்டச்சு செய்கிறார் மாணவர் ஆனந்த்.
முன்னதாக தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் இரு மாணவிகள் இதே முறையில் தேர்வு எழுதியுள்ளனர். வரும் ஆண்டில் தன்னைப் போலவே 10க்கும் மேற்பட்ட பார்வை மாற்றுத் திறனாளி மாணவர்கள் தேர்வெழுத பயிற்சி எடுத்து வருவதாகக் கூறுகிறார், ஆனந்த்.
விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு