ஃபெஞ்சல் புயல்: விழுப்புரம் எப்படி இருக்கிறது? - கள நிலவரம்
ஃபெஞ்சல் புயல் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழையால் குடியிருப்புப் பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) வரை வெள்ளம் வடியாத நிலை காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
88 நிவாரண மையங்களில் 5,694 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தரைப்பாலங்களில் மூழ்கியதால் 150-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் நகரம் மட்டுமல்லாது, விக்கிரவாண்டி, திண்டிவனம், மரக்காணம், திருக்கோவிலூர் உட்பட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துக் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளது.
பல குடியிருப்புகளைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டதால் அங்குள்ள மக்களைப் பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டனர். மாவட்டத்தில் 88 மையங்களில் 5,684 பேர் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன.
வெள்ளநீர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்துச் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும், 150 கிரமத்திற்குச் செல்லும் பல சாலைகளிலும் நீர் சூழ்ந்ததால், மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானர்.
புயல் பாதிப்பால் விழுப்புரம் மாவட்டத்தில் பலர் வெள்ள நீரில் மூழ்கியது, வெள்ள நீரால் அடித்துச் செல்லப் பட்டது போன்ற பல்வேறு காரணங்களால் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாவட்ட காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
விழுப்புரம் கள நிலவரம் குறித்து விரிவாக காணொளியில்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



