BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்

பிரசுரிக்கப்பட்டது

வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம்.

எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம்.

நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும். பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை மாறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அந்த வகையில் இந்த வாரம், ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ மோதி ஆட்சியை வீழ்த்துவதில் காங்கிரஸ் கட்சிக்கு உதவுமா? மலேசியாவின் புதிய பிரதமர், காணாமல் போகும் 2,000 ரூபாய் தாள்கள் கருப்புப் பணமாக மாறுகிறதா?, ஜேம்ஸ் பாண்ட் பாணியில் ராணுவ ரகசியங்களைக் கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும் ஹனி ட்ராப், கத்தார் உலக கோப்பை தொடரில் எல்ஜிபிடி ஆதரவு பிரசாரம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது ஏன்? என்பன உள்ளிட்ட ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.

ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ மோதி ஆட்சியை வீழ்த்துவதில் காங்கிரஸ் கட்சிக்கு உதவுமா?

இக்கட்டான சூழலில் இருக்கும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரை என்று அழைக்கப்படும் ஒற்றுமைப் பயணத்தின் நடுவே இருக்கிறார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரில் தொடங்கி நாடு முழுவதும் ஐந்து மாத காலம் செல்லும் இந்தப் பயணம் பிப்ரவரி மாதத்தில் ஜம்மு காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில் நிறைவடையும். விரிவாக படிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

மலேசியாவின் புதிய பிரதமராக அன்வார் இப்ராகிம் பதவியேற்பு

மலேசிய நேரப்படி சுமார் 5 மணியளவில் மன்னர் முன்னிலையில் இந்தப் பதவியேற்பு நடந்தது. பிறகு தனது பதவியேற்புப் படத்தை ட்வீட் செய்த அன்வார், இது மிகப்பெரிய பொறுப்பு என்றும் இதனை மக்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார். விரிவாக அறிய இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

காணாமல் போகும் 2,000 ரூபாய் தாள்கள்: கருப்புப் பணமாக மாறுகிறதா?

ஆறு ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றால் இந்த நாட்களில் வங்கிகள் மற்றும் ஏடிஎம் வாசல்களில் இந்தியர்கள் நின்றுகொண்டிருந்தனர். ஏடிஎம்களில் 100 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே இருந்தன.

2,000 ரூபாய் நோட்டாக இருந்தால் ஒருவருக்கு இரண்டு நோட்டுகள் மட்டுமே கிடைக்கும். அந்த இரண்டு நோட்டுகளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் வெகுநேரமாக காத்திருந்தனர். சிலர் அந்த வரிசையில் நிற்கும் போதே உயிரிழக்கவும் செய்தனர்.

அந்த நேரத்தில் அனைவரின் கைகளிலும் பார்க்க முடிந்த 2,000 ரூபாய் நோட்டுகளை, தற்போது அதிகம் பார்க்க முடிவதில்லை. இதற்கு என்ன காரணம்? லிங்கை க்ளிக் செய்து பின்னணியை அறிந்து கொள்ளுங்கள்.

ஜேம்ஸ் பாண்ட் பாணியில் ராணுவ ரகசியங்களைக் கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும் ஹனி ட்ராப்

ஒருவருடன் காதல் அல்லது பாலியல் உறவை ஏற்படுத்தி அவரிடம் இருந்து நமக்குத் தேவையான ரகசிய தகவல்களைப் பெறுவதற்கு ஹனி ட்ராப் என்று பெயர். பொதுவாக, இதற்கு அழகான தோற்றம் கொண்டவர்கள் பயன்படுத்தப்படுவார்கள்.

எப்போதெல்லாம் ஹனி டிராப் உத்தி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை லிங்கை க்ளிக் செய்து அறியலாம்.

கத்தார் உலக கோப்பை: எல்ஜிபிடி ஆதரவு பிரசாரம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது ஏன்?

கத்தார் உலக கோப்பை போட்டியின் போது மைதானத்துக்குள் விளையாடும் வீரர்கள் 'ஒன் லவ்' என்ற கைப்பட்டையை அணியப் போவதில்லை.

வானவில் வண்ணத்திலான இந்த கை பட்டையை அணியும் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஃபிஃபா எச்சரிக்கை விடுத்தது. எனவே ஐரோப்பிய நாடுகளின் கால்பந்து அணிகள் இந்த எதிர்ப்பு பட்டையை அணிவதில்லை என்ற முடிவை நோக்கித் தள்ளப்பட்டனர். லிங்கை க்ளிக் செய்து முழு விபரத்தை அறியவும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: