BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்.
வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம்.
எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம்.
நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும். பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை மாறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அந்த வகையில் இந்த வாரம், மோதியை விமர்சித்த ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையால் பறிபோன எம்பி பதவி - அடுத்து என்ன?, தமிழ்நாடு பட்ஜெட் 2023, யுக்ரேனில் ஜப்பான் பிரதமர்- ரஷ்யாவில் சீன அதிபர்: எதிரெதிர் பயணங்களுக்கு காரணம் என்ன?, ரமலான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வது எப்படி?, அகநக முகநக பாடல்: குந்தவையின் இதயச் சிறையில் வந்தியத்தேவன் சிறைபட்ட கதை தெரியுமா? என்பன உள்ளிட்ட ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
மோதியை விமர்சித்த ராகுல் காந்தி - பறிபோன எம்பி பதவி - அடுத்து என்ன?
2019ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது, ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக அவர் மீது சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், ராகுல் காந்தி குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
தமிழ்நாடு பட்ஜெட் 2023: "குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் செப்.15 முதல் தொடங்கும்"

பட மூலாதாரம், TNDIPRNEWS
குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதால் இந்த பட்ஜெட் வெகுவாக கவனம் பெற்றது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 15 முதல் தொடங்கும் என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் அறிவித்துள்ளார். முழு விபரம் அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
யுக்ரேனில் ஜப்பான் பிரதமர்- ரஷ்யாவில் சீன அதிபர் - காரணம் என்ன?
யுக்ரேன் போர் ஆசியாவில் எப்படி எதிரொலிக்கிறது என்பதை நீங்கள் அறிய விரும்பினால், ஜப்பான் மற்றும் சீன தலைவர்களின் பயணம் உங்களுக்கு ஒரு சிறந்த உதாரணத்தை வழங்கக்கூடும்.
போரில் எதிரெதிர் பக்கங்களில் உள்ள நாடுகளுக்கான பயணத்தில் இந்த நாடுகளின் தலைவர்கள் உள்ளனர். முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
ரமலான் பண்டிகை: நோன்பு நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வது எப்படி?
இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகைக்காக நோன்பிருக்கும் புனித மாதம், வரும் மார்ச் 22ஆம் தேதி அன்று மாலை துவங்குகிறது.
நோன்பிருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் மேற்கொள்வதிலும் உடல் ஆரோக்கியத்தை கையாள்வதிலும் குழப்பங்கள் இருந்தால், இந்த கட்டுரை உங்களுக்கு உதவலாம். முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
அகநக முகநக பாடல்: குந்தவையின் இதயச் சிறையில் வந்தியத்தேவன் சிறைபட்ட கதை தெரியுமா?

பட மூலாதாரம், MADRAS TALKIES
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தில் வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் இடையில் வருவதைப் போன்ற 'அகநக' பாடல் தற்போது வெளியாகி, எல்லோரையும் முணுமுணுக்க வைத்துள்ளது.
நாவலில் குந்தவை - வந்தியத்தேவன் இடையிலான காதல் எப்படிப்பட்டது? முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












