You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குப்பை நிறைந்த வீடுகளில் வாழும் தென்கொரிய இளைஞர்கள் - என்ன காரணம்?
தென் கொரியாவில், சமீபத்திய மதிப்பீடுகளின்படி, 40 வயதுக்குட்பட்ட சுமார் 15 லட்சம் இளைஞர்கள் மனஅழுத்தத்தில் உள்ளனர் என கூறப்படுகிறது.
அவர்களில் பெரும்பாலானோர் குப்பைகள் நிறைந்த வீடுகளில் வாழ்கின்றனர். இந்த வீடுகளைச் சுத்தம் செய்யும் பணியை சிலர் வணிக ரீதியாகச் செய்து வருகிறார்கள்.
“ஒரு மாதத்திற்கு சராசரியாக 100 வாடிக்கையாளர்கள் வீடுகளைச் சுத்தப்படுத்த எங்களை அழைக்கின்றனர். அதில் பெரும்பாலானோர் இளைஞர்கள்” என்கிறார் ‘கிளீன் அவெஞ்சர்ஸ்’ அமைப்பின் சன் யோங்கி.
“பணியின்போது, அதிகமான மனஅழுத்த மருந்துகளைக் கண்டேன். இது நாளுக்கு நாள் மோசமடைகிறது. நாட்டில் இத்தனை பேர் மனஅழுத்தத்தில் உள்ளனர் என எனக்கு தெரியாது.” என்கிறார் அவர்.
“சுத்தப்படுத்தும் பணியை முடித்த பிறகு, கிட்டத்தட்ட அனைத்து வாடிக்கையாளர்களும் அழுதுவிட்டனர். அது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. உதவிக்கு யாரேனும் இருந்திருந்தால் அவர்களுக்கு இந்நிலை ஏற்பட்டிருக்காது.” என்கிறார் ‘டுடே’ஸ் கிளீனிங்’ அமைப்பின் முன் வாஜுன்.
முழு விவரம் காணொளியில்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)