"என் கூடவே அம்மா இருக்காங்க" - அம்மாவுக்காக 6 அடி உயர சிலை வைத்த சகோதரிகள் நெகிழ்ச்சி
"என் கூடவே அம்மா இருக்காங்க" - அம்மாவுக்காக 6 அடி உயர சிலை வைத்த சகோதரிகள் நெகிழ்ச்சி
பிரசுரிக்கப்பட்டது
குஜராத் மாநிலம், ஜுனாகத்தில் வசிக்கும் மூன்று சகோதரிகள், மறைந்த தங்கள் தாயின் 6 அடி உயர சிலையை வீட்டில் நிறுவி இருக்கிறார்கள். ஹிராபென் உயிருடன் இருந்தவரை தன் மகள்களுக்கு ஆதரவாக இருந்துள்ளார்.
ஹிராபென் இறந்தபிறகு, அவரது நினைவாக காலமெல்லாம் ஏதாவது இருக்க வேண்டும் என்பதற்காக அவரின் மூன்று மகள்களும் இணைந்து இந்த சிலையை உருவாக்கியிருக்கிறார்கள்.
6 அடி உயரத்தில் உருவாக்கியிருக்கும் இந்த சிலைக்கு தினந்தோறும் ஆரத்தி எடுத்து பூஜை செய்கின்றனர்.

மேலும் தாயின் நினைவாக அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி அதன் மூலமாக பல்வேறு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர் இந்த சகோதரிகள்.
செய்தியாளர்கள்: ஹனிஃப் கோகார் / ரவி பார்மர்
தயாரிப்பு: தீபக் சுடசாமா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



