You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உத்தராகண்ட் சுரங்க விபத்து: நாட்டையே நெகிழ வைத்த ஒரு தந்தையின் முத்தம் – காணொளி
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் கட்டப்பட்டுவந்த சுரங்கப் பாதை விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் பெரும் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தீபாவளி நாளன்று (நவம்பர் 12) ஏற்பட்டது. தற்போது சுரங்கத்தினுள் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் 17 நாட்கள் கழித்து மீட்கப்பட்ட நிலையில், இப்போதுதான் அவர்களது வீடுகள் உண்மையான தீபாவளிக் கோலம் பூண்டுள்ளன.
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டம் பைரம்பூர் கிராமத்தை சேர்ந்த மஞ்ஜீத்தும் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கிக்கொண்டவர்களில் ஒருவர்.
மஞ்ஜீத் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கி கொண்ட செய்தி வந்த உடனேயே நகைகளை விற்றுவிட்டு சம்பவ இடத்திற்கு சென்று விட்டார் அவரின் தந்தை.
மஞ்ஜீத் பாதுகாப்பாக வெளியே வந்த உடனே அவரது தந்தை அவருக்கு முத்தமிடும் படங்களை சமூக வலைத்தளங்களில் வைரலாயின.
அந்தத் தந்தையின் உணர்ச்சிகள் இந்தக் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)