ஃபிரான்ஸ்: 17 வயது இளைஞர் சுட்டுக் கொலை - வன்முறைக் காடாக மாறிய நகரங்கள்
ஃபிரான்ஸ் நாட்டில் 17 வயது இளைஞர் ஒருவர் போலீஸாரல் சுட்டுகொல்லப்பட்டதை அடுத்து, பாரிஸ் உட்பட அந்நாட்டின் முக்கிய நகரங்கள் வன்முறைக்காடாக மாறியுள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை, மேற்கு பாரிஸின் புறநகர்ப் பகுதியான நான்டெர்ரேயில் ட்ராஃபிக் சோதனையின் போது, நஹெல் என்ற 17 வயது இளைஞர் போலீஸாரல் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சில பிரெஞ்சு ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, தங்கள் மீது மோதும் நோக்கத்தோடு காரை அந்த இளைஞர் ஓட்டி வந்தார் என போலீஸார் கூறுகின்றனர்.
ஆனால், ஏஎஃப்பி செய்தி முகமையால் உறுதிசெய்யப்பட்ட ஒரு காணொளியில் கார் ஜன்னல் வழியாக போலீஸார் துப்பாக்கியை நீட்டுவதை பார்க்க முடிகிறது.
அதே காணொளியில் நீ தலையில் சுடப்பட போகிறாய் எனும் குரலைக் கேட்க முடிவதாகவும் ஏஎஃப்பி முகமை கூறுகிறது. ஆனால், அதைக் கூறியது யார் என்பது இன்னும் உறுதியாகவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



