நிலவின் தென் துருவத்தில் இந்தியா கவனம் செலுத்துவது ஏன்? இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பிரத்யேக பேட்டி

நிலவின் தென் துருவத்தில் இந்தியா கவனம் செலுத்துவது ஏன்? இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பிரத்யேக பேட்டி
பிரசுரிக்கப்பட்டது

சந்திரயான் 3 திட்டத்தின் முக்கிய கட்டமான விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் முயற்சி இன்று செயல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், இஸ்ரோவின் முன்னாள் தலைவரான சிவன் சந்திரயான் 3 திட்டம் குறித்து பல்வேறு தகவல்களை பிபிசியிடம் பகிர்ந்துகொண்டார்.

நிலவின் தென் துருவத்தில் இந்தியா கவனம் செலுத்துவது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நிலவின் தென் பகுதி நிழல் பகுதி என்று அழைக்கப்படுகிறது. அப்பகுதி இதுவரை ஆய்வு செய்யப்படாதது. அங்கு சென்று ஆய்வு செய்வதன் மூலம் அறிவியலில் புதியவற்றை அறிந்துகொள்ள முடியும் என்று தெரிவித்தார். (முழு தகவல் காணொளியில்)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: