இலங்கை யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்ட சொந்தங்கள் எங்கே? - தமிழர்கள் குமுறல்

இலங்கை யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்ட சொந்தங்கள் எங்கே? - தமிழர்கள் குமுறல்
பிரசுரிக்கப்பட்டது

ஆகஸ்ட் 30-ஆம் தேதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை இலங்கையிலும் பலர் கடைபிடித்தனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர் சுழற்சி முறையிலான போராட்டம் வவுனியா நகரில் சுமார் 2380 நாட்களை கடந்து இன்றும் நடந்து வருகின்றது.

வவுனியாவைச் சேர்ந்த 52 வயதான வெலன்டினா, இறுதி யுத்தத்தில் தனது தாயான விக்டோரியா ராணியை தொலைத்து இன்றும் தேடி வருகின்றார்.

திருமண வாழ்க்கைக்குள் பிரவேசிக்காது, தனிமையில் வாழ்ந்து வரும் வெலன்டினா, 14 வருடங்கள் தனது தாயை தேடும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: