You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியமைத்த 'பாரதிராஜா' எனும் சின்னசாமி
தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரத்தில் 1941ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி பிறந்த சின்னசாமி, பாரதிராஜாவாக திரையுலகில் கோலோச்சினார். ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியமைத்த இயக்குநர் இமயம் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84.
பள்ளிப் பருவத்திலேயே இலக்கியங்கள் படிப்பதிலும், மேடை நாடகங்கள் நடத்துவதிலும் மிகுந்த ஆர்வமிருந்தது. 'ஊர் சிரிக்கிறது', 'சும்மா ஒரு கதை' போன்ற கதைகளை எழுதி அவர் ஊர் திருவிழாக்களின் போது, பல மேடைகளில் அரங்கேற்றியுள்ளார்.
தனது ஊரிலேயே சிறிது காலம் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்த சின்னசாமி, சினிமாவின் மீது கொண்ட ஈர்ப்பால் சென்னை சென்று மேடை நாடகம், பெட்ரோல் பங்க் வேலை என பணிபுரிந்து கொண்டே சினிமாத் துறையில் நுழைய முயற்சித்தார்.
இயக்குனர் பி புல்லையாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். 1977-ஆம் ஆண்டு பாரதிராஜாவின் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது. அவர் இயக்குநராக அறிமுகமான '16 வயதினிலே '
திரைப்படம் வெளியாகி, கிராமப் பின்னணியில் வந்த இத்திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் அவரை கொண்டு சேர்த்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு