You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்ரேலை அச்சுறுத்தும் 'ஹெஸ்புல்லா' தோன்றியது எப்படி? பின்னணியில் இருப்பது யார்?
ஹெஸ்புல்லா என்பது இரான் ஆதரவு கொண்ட ஷியா இஸ்லாமிய அரசியல் கட்சி மற்றும் லெபனானில் உள்ள துணை ராணுவக் குழு ஆகும். இது 1992 முதல் ஹசன் நஸ்ரல்லாவால் வழிநடத்தப்படுகிறது. ஹெஸ்பொல்லா என்ற பெயரின் பொருள் கடவுளின் கட்சி.
கடந்த 1980களின் முற்பகுதியில் லெபனான் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் இருந்தபோது இரானின் நிதி மற்றும் ராணுவ உதவியுடன் ஹெஸ்புல்லா உருவாக்கப்பட்டது.
லெபனானின் பாரம்பரியமாக இருந்த அதிகாரமிழந்த ஷியாக்களை தெற்கில் பாதுகாப்பதற்கான ஒரு சக்தியாக அது இருந்தது. அதன் கருத்தியல் வேர்கள் 1960 மற்றும் 1970களில் லெபனானில் ஷியா இஸ்லாமிய மறுமலர்ச்சி வரை நீண்டுள்ளது.
இஸ்ரேல் 2000ஆம் ஆண்டில் பின்வாங்கிய பிறகு, ஹெஸ்புல்லாவை நிராயுதபாணி ஆக்குவதற்கான அழுத்தத்தை எதிர்த்த ஹெஸ்புல்லா, அதன் ராணுவப் பிரிவையும் வலுப்படுத்தியது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)