கர்நாடகாவின் முதல்வராக மீண்டும் சித்தராமையா - அரசியல் கிராண்ட் மாஸ்டர்

காணொளிக் குறிப்பு, கர்நாடகாவின் முதல்வராக மீண்டும் தேர்வான சித்தராமையா - அரசியல் கிராண்ட் மாஸ்டர்
கர்நாடகாவின் முதல்வராக மீண்டும் சித்தராமையா - அரசியல் கிராண்ட் மாஸ்டர்
பிரசுரிக்கப்பட்டது

கிராமப்புற கர்நாடகத்தில் வலுவான பிடிப்புள்ள முன்னாள் முதல்வராக இருந்த சித்தராமையா முதல்வர் பதவிக்கு வருவது அவரது சாதனைகளின் வரிசையில் இன்னொரு சாதனை.

நாட்டில் தொடர்ந்து 13 பட்ஜெட்களை தாக்கல் செய்த சாதனையையும் சித்தராமையா படைத்துள்ளார்.

தொடர்ந்து பத்து முறை பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் பிரதமரும், மத்திய நிதியமைச்சருமான மொரார்ஜி தேசாய், சித்தராமையாவுக்குப் பிறகுதான் வருகிறார். சித்தராமையா முதல் முறையாக 2013 முதல் 2018 வரை முதலமைச்சராக பதவி வகித்தபோது தேவராஜ் அர்ஸுக்குப் பிறகு (1972-1978) ஐந்தாண்டு பதவிக் காலத்தை முடித்த இரண்டாவது முதலமைச்சராக ஆனார்.

இவரைப் பற்றி நமக்கு வேறு என்ன கூடுதலாக தெரியும்? விரிவான தகவல் இந்த காணொளியில்.

சித்தராமையா கர்நாடகா காங்கிரஸ்
படக்குறிப்பு, சித்தராமையா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: