இலங்கையில் எட்டு கால்களுடன் பிறந்த கன்றுக்குட்டி

இலங்கையில் எட்டு கால்களுடன் பிறந்த கன்றுக்குட்டி
பிரசுரிக்கப்பட்டது

இலங்கையில் வவுனியா பகுதியில் எட்டு கால்களுடன் ஒரு கன்றுக்குட்டி பிறந்துள்ளது.

கோவில் குஞ்சுக்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் ஞனேஸ்வரன் என்பவர், தனது வாழ்வாதாரத்திற்காக மாடுகளை வளர்ந்து வருகின்றார். அவர் வளர்த்து வந்த பசு ஒன்று கடந்த ஆறாம் தேதி கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றெடுத்துள்ளது.

ஈன்றெடுக்கப்பட்ட கன்றுக்குட்டியை கண்டதும், அந்த பகுதி மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

பிறந்த ஒரேயொரு கன்றுக்குட்டிக்கு, எட்டு கால்கள் இருந்துள்ளதை கண்டு அப்பிரேதச மக்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர். ஆனால் இந்த கன்றுக்குட்டி ஆரோக்கியமாக இருப்பதாக உரிமையாளர் தெரிவிக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: