You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
800 ஆண்டுகள் பழமையான மம்மியை டெலிவரி பேக்கில் வைத்து சுற்றித் திரிந்த நபர்
பெரு நாட்டைச் சேர்ந்த ஒருவர் 800 ஆண்டுகள் பழமையான மம்மியை தனது டெலிவரி பேக்கில் வைத்துக்கொண்டு சுற்றித்திரிந்துள்ளார். 30 ஆண்டுகளாக தன்னுடன் இந்த மம்மி இருப்பதாக அவர் கூறுகிறார்.
பெரு நாட்டைச் சேர்ந்த ஜூலியோ சீசர் என்பவரின் டெலிவரி பேக்கில் இருந்துதான் இந்த பதப்படுத்தப்பட்ட உடலை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ` என்னுடைய படுக்கை அறையில் என்னுடன் தான் ஜுவானிடா தூங்கும் என்று அவர் கூறுகிறார். ஆம், அந்த மம்மியை ஜூவானிடா என்றுதான் அவர் அழைக்கிறார்.
இந்த உடல் ஒரு பெண்ணுடையது என்று ஜூலியோ நம்புகிறார். ஆனால், அந்த உடல் 600ல் இருந்து 800 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துபோன ஒரு ஆணுடையது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இறக்கும்போது அவருக்கு 45 வயது இருந்திருக்கலாம் என்பது அவர்களின் கூற்று. தற்போது பெரு நாட்டின் கலாச்சார அமைச்சகத்திடம் இந்த மம்மி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த மம்மி குறித்து ஜூலியோ மேலும் கூறியது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்