மத வெறுப்பைப் போக்கிய மனிதம்: தமிழ்நாட்டு மாணவி உ.பி.யில் என்ன செய்தார்?
ஒரு முஸ்லிம் பெண்ணுடன் நட்பு கொள்வது காவ்யாவுக்கு இதுவே முதல் முறை. பனாரஸ் காசி இந்து பல்கலைக்கழகத்தில் (BHU) `ரூம் மேட்’ ஆன பிறகு இந்த நட்பு ஏற்பட்டது.
நூர் பாத்திமா கான் மற்றும் காவ்யா விடுதியில் ஒரே உணவைச் சாப்பிடுவதால் விரைவில் நட்பாகி விட்டதாக காவ்யா கூறுகிறார். அதாவது இருவரும் அசைவம் சாப்பிடுகிறார்கள். ``உணவும், பாடல்களும் ஒன்றிப் போனால், உறவைப் பேணுவது எளிதாகிறது’’ என்கிறார் காவ்யா.
காவ்யா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று நூர் பாத்திமா கான் அறிந்ததும், இருவருக்கும் இடையே ஒத்துப் போகுமா என்று எண்ணித் தயங்கினார். ஆரம்பத்தில் நூர் காவ்யாவுடன் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று நினைத்தார். ஆனால் காவ்யா நூரிடம் ஹிந்தியில் பேச ஆரம்பித்ததும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டார்.
காவ்யா நீண்ட நாட்களாக வட இந்தியாவில் வசிப்பதால் ஹிந்தியும் நன்றாகப் பேச கற்றுக் கொண்டார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



