டெல்லியை நோக்கி பேரணியாக வந்த விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு

காணொளிக் குறிப்பு, டெல்லியை நோக்கி பேரணியாக வந்த விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு - காணொளி
டெல்லியை நோக்கி பேரணியாக வந்த விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு
பிரசுரிக்கப்பட்டது

ஓராண்டு காலம் தொடர்ந்து போராடி, நரேந்திர மோதி அரசு விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய வைப்பதில் வெற்றி பெற்ற விவசாயிகள், தங்களது கோரிக்கைகளுக்காக மீண்டும் களத்தில் இறங்கத் தயாராகிவிட்டனர்.

ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக வந்து கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் டெல்லி எல்லைக்குள் வர முடியாதபடி காவல்துறையினர் பல்வேறு வகையான தடுப்புகளை வைத்திருக்கின்றனர்.

ஹரியாணா - பஞ்சாப் எல்லையில் பேரணியாக வந்த விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர்.அரசுடனான பேச்சுவார்த்தைகளில் இன்னும் முடிவு எட்டப்படாததால் விவசாயிகளின் இரண்டு பெரிய அமைப்புகளான சம்யுக்த் கிசான் மோர்ச்சா (அரசியல் சாராதது) மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய இரண்டும், தங்களது கோரிக்கைகளுக்காக செவ்வாய்க்கிழமை 'டெல்லி நோக்கி அணிவகுப்போம்' என்ற முழக்கத்தில் உறுதியாக உள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தில்லியின் எல்லையில் தங்கிப் போராடிய விவசாயிகளின் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதனால் நரேந்திர மோதி அரசாங்கம் விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம்-2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) விலை ஒப்பந்த உத்தரவாதம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020, மற்றும் அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவற்றை ரத்து செய்தது.

பஞ்சாப் விவசாயிகள்

பட மூலாதாரம், ANI

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)