You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஸா: ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகளுக்கு தாய்ப்பால் இல்லாமல் தவிக்கும் தாய்
போரால் பாதிக்கப்பட்டுள்ள பாலத்தீன பிரதேசமான காஸாவில், தன் சொந்த வீட்டில் இருந்து பல கி.மீ. தொலைவில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பெற்றெடுத்த இமான் அல்-மஸ்ரி முற்றிலும் சோர்வாக இருக்கிறார். 9 பேர் அடங்கிய அவரது குடும்பம் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்யவே போராடிக் கொண்டிருக்கிறது.
இமான் அல்-மஸ்ரியை மருத்துவமனையில் அனுமதிக்க காஸாவில் தெற்குப் பகுதிக்குச் செல்வதற்காக, அவரும் அவருடைய குடும்பத்தினரும் 5 கி.மீ தூரம் நடக்க வேண்டியிருந்தது. அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகள் பிறந்தன.
ஆனால், ஒரு குழந்தையை மட்டும் மருத்துவமனையில் விட்டு வர வேண்டியிருந்தது. அந்தக் குழந்தை ஒரு கிலோ மட்டுமே இருந்ததால், குழந்தை பிழைக்குமா என்ற சந்தேகம் அவருக்கு இருக்கிறது.
பள்ளி வகுப்பறையைத் தங்குமிடமாகப் பயன்படுத்துவதால், தாங்கள் தாக்குதலுக்கு ஆளாகி விடுவோமோ என இந்தக் குடும்பத்தினர் அஞ்சுகின்றனர்.
உணவும் தண்ணீரும் மிகக் குறைவாக இருப்பதால் தாங்கள் கையறு நிலையில் இருப்பதாக அவருடைய கணவர் கூறுகிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)