You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'சந்தோஷமா இருந்தோம், இப்ப எங்க வாழ்க்கையே யுத்தமா மாறிடுச்சு' - காஸா சிறுமியின் வேதனை குரல்
காஸாவில் போர் தொடங்கி, 143வது நாளின் இரவு நேரத்தில் இந்தக் காணொளி எடுக்கப்பட்டது. இங்கு 7 வயது சிறுமி உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை தொடரும் நிலையில், இந்தக் காணொளியில் காஸாவை சேர்ந்த மூன்று பேரின் வாழ்க்கையை பிபிசி பதிவு செய்துள்ளது.
ரஃபாவில் ஏழு வயது சிறுமியைக் கொன்ற குண்டுச் சத்தத்தை மாலக் கேட்டிருக்கிறார். தன் குடும்பத்திற்கு உதவுவதற்காக, மாலக்கின் நாள் அதிகாலையிலேயே ஆரம்பித்து விடுகிறது. அவருடைய தாயும் சகோதரரும் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், சிறிது மாவைப் பயன்படுத்தி மொறுமொறுப்பான ரொட்டிகளைத் தயாரிக்கின்றனர். அதை விற்று, தாய்க்கும் சகோதரருக்கும் தேவையான மருந்துகளை வாங்குகிறார் மலக்.
இங்கு 65 வயதான சமீரா நூரல்லாவுக்கு வேறுமாதிரியான சவால்கள் உள்ளன. கடந்த 2023ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் முதன்முதலில் பிபிசி அவரைச் சந்தித்தபோது, அவர் தன் 9 பேரக்குழந்தைகளையும் தன் கணவரையும் கவனித்துக் கொண்டிருந்தார்.
மருந்துகள் இல்லாமல், சமீராவின் கணவர் அகதிகள் முகாமிலேயே உயிரிழந்தார். சமீரா மீண்டும் பிபிசியை தொடர்புகொண்டு இந்த வீடியோவை அனுப்பினார்.
இது காஸா நகரத்தில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனை. இங்கு பணிபுரியும் மருத்துவர் அல் ஷேய்க், காணொளி ஒன்றை பிபிசிக்கு அனுப்பினார். அதில், போர் தொடங்கிய இந்த நான்கு மாதங்களில்தான் இரண்டு முறை மட்டுமே மருத்துவமனையை விட்டு வெளியே சென்றதாக அவர் கூறுகிறார்.
மருத்துவர் அல்-ஷேய்க் பாதிக்கப்பட்ட சிலரை காணொளியில் பதிவு செய்துள்ளார். மூன்று வயதான ஜூட் குண்டுவெடிப்பில் தன்னுடைய கால்களை இழந்துவிட்டார். ஒன்பது வயதான ஆடமுக்கு, தசையழுகல் காரணமாக அவருடைய ஒரு கால் துண்டிக்கப்பட்டது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)