அமெரிக்காவின் தாக்குதலுக்கு இரான் பதிலடி தருமா? பாதுகாப்பு அமைச்சர் கூறியது என்ன?
இஸ்ரேல் - இரான் இடையே நடைபெறும் மோதலில், யாரும் எதிர்பாராத வகையில் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது அமெரிக்கா. இரானின் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரு முழு நீள போருக்கான பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இரான் பதில் தாக்குதல் நடத்தினால் அது அமெரிக்காவையும் இந்த போருக்குள் முழுமையாக ஈடுபட வைக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன. இந்த சூழலில், இரானின் தற்போதைய நிலைப்பாடு குறித்து விளக்கியுள்ளார் அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் அமீர் ஹதாமி.
"இது ஒன்றும் புதிதல்ல. இஸ்லாமியப் புரட்சி வரலாறு முழுவதும், புரட்சிக்கு முன்பும் கூட இரானின் வரலாறு முழுக்க அமெரிக்கா செய்த குற்றங்களை நாம் தொடர்ந்து கண்டிருக்கிறோம்.
1979 தொடங்கிய மோதலின் இறுதி காலத்தில் அவர்களின் நேரடி குற்றங்களை நாம் கண்டோம். ஒவ்வொரு முறை குற்றம் இழைக்கும் போதும், அவர்களுக்கு உரிய பதிலடி கிடைத்தது.
இந்த முறையும் அதில் மாற்றம் இருக்காது. நாங்கள் வெற்றிக்காக போராடுவோம். தியாக மரணத்தை பெரிய ஆசீர்வாதமாகக் கருதுகிறோம். ஆனால் தற்போது வெற்றிக்காகப் போராடுகிறோம்," என்று அவர் அறிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
இஸ்ரேல் - இரான் விவகாரம் தொடர்பாக மேலும் பல முக்கிய செய்திகள் இங்கே
- இரானை அமெரிக்கா தாக்கியதால் அணு ஆயுத தயாரிப்பு கைவிடப்படுமா? - இருநாடுகளுக்கும் முன் இருக்கும் வாய்ப்புகள் என்ன?
- இஸ்ரேலிடம் எத்தனை அணு ஆயுதங்கள் உள்ளன? இரானை குற்றம்சாட்டும் இஸ்ரேலை சூழ்ந்துள்ள 'மர்மம்'
- இரான் மீது அமெரிக்கா தாக்குதல் - இஸ்லாமிய நாடுகளின் எதிர்வினை என்ன?
- அமெரிக்க தாக்குதலில் இரான் அணுசக்தி தளங்களில் ஏற்பட்ட சேதம் என்ன? 5 கேள்வி-பதில்கள்



