You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகாராஷ்டிரா: கிராமத்தை பஞ்சத்தில் இருந்து மீட்ட தண்ணீர் ராணிகள் - சாதித்துக் காட்டிய பெண்கள்
இவர்கள் மகாராஷ்டிராவின் ஜல்னயிகா, அதாவது ‘தண்ணீர் ராணிகள்’ என்று அழைக்கப்படுகின்றனர். இந்தப் பெண்களின் விடாமுயற்சியால், கோடையின் உச்சகாலமான ஏப்ரல் மாதத்திலும் கிராம மக்களுக்குக் குடிநீர் கிடைக்கிறது. இந்தப் பெண்கள், தம் சமூகத்தின் ஆதரவுடன், நிலத்தடி நீராதாரங்களை வெற்றிகரமாகப் பாதுகாத்துள்ளனர்.
சதாராவில் உள்ள மான் தாலுகா, குறிப்பாக தஹிவாடி, வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறியப்படுகிறது. டிசம்பரில் தொடங்கும் குடிநீர் தட்டுப்பாடு கோடைக்காலம் வரை நீடிக்கிறது.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல், மேகா, சுவாதி, மணிஷா, அஸ்மிதா மற்றும் ஆறு கிராமங்களைச் சேர்ந்த மற்ற பெண்களுக்கு தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டத்தில் ஃபெல்லோஷிப் வழங்கப்பட்டது.
அவர்களின் பயிற்சி, உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களான கோரோ இந்தியா மற்றும் ஈக்விடேம் ஆகியவற்றுடன் தொடங்கியது. இந்தப் பயிற்சி, அறிவியல் அணுகுமுறையைப் பயன்படுத்தி கிராமத்திற்குத் தண்ணீர் கொண்டு வருவதில் கவனம் செலுத்தியது.
பரத்வாடி, பாங்கீர், பன்வாட், தடலே, பச்வாட், வாலை போன்ற கிராமங்களுக்கு அரசு மானியமாக ரூ,1.44 கோடி கிடைத்தது. பல இடங்களில் கிராம மக்கள் தாமாக முன்வந்து இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய கிராமங்களில் தன்னம்பிக்கை கொண்ட பெண் தலைவர்கள் உருவாகியுள்ளதை இந்தப் பெண்களின் தண்ணீர் கதை எடுத்துக்காட்டுகிறது. அவர்கள் இந்தப் பணியைத் தங்கள் சமூகத்திற்கு அளித்த உறுதிமொழியாகக் கருதுகிறார்கள்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)